search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி படுகாயம்"

    குடியாத்தத்தில் கல்குவாரி வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளிக்கு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் கல்லேரி பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில், பெண்கள் உள்பட 75-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். பாறைகளை பிளக்க டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி அடங்கிய வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைக்கிறார்கள்.

    வெடி சிதறும் பாறைகளை சிறு, சிறு கற்களாக உடைத்து ஜல்லி தொழிற்சாலைக்கு அனுப்புகின்றனர். இப்படி, அதே பகுதியை சேர்ந்த தசரதன் (வயது 27) என்கிற தொழிலாளி, கல் கம்பம் நடுவதற்காக பாறைகளை நீளமாக பிளக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    பெரிய பாறைகளாக இருந்தால், அவற்றில் சிறு சிறு துளையிட்டு கொஞ்சம் வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைத்துபிளந்துள்ளார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த தசரதன் தன் பக்கத்தில் வெடி மருந்துகளை வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது.

    இதில் கூலித்தொழிலாளி தசரதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற தொழிலாளர்கள் சற்று தொலைவில் இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உயிருக்கு போராடிய தொழிலாளியை மீட்டு குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். தசரதனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (65) தேயிலை தோட்ட கூலி தொழிலாளி. இவர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தேயிலை செடிகளை ஒட்டி புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று பாலசுப்ரமணியத்தை நோக்கி ஓடி வந்ததுடன் அவரை கொம்புகளால் குத்தி கீழே தள்ளியது.

    இதில் பாலசுப்ரமணியத்தின் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்தவரை அக்கம் பக்கத்தார் மீட்டனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குந்தா வனச்சரகர் சரவணன் தலைமையில் வனக்காப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
    காங்கயத்தில் வீட்டின் மேற்கூரையில் ஏறி வேலை பார்த்த தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் சேசுமாணிக்கம் (வயது 40). இவரது நண்பர் ஜெயசீலன் (46). இருவரும் தொழிலாளர்கள். இவர்கள் காங்கயத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். வீட்டின் மேற்கூரையில் ஏறி பிரித்து கொண்டிருந்தனர். அப்போது மேற்கூரை சிமெண்டு கூரை திடீரென சரிந்தது. இதில் தொழிலாளர்கள் இருவரும் மேலே இருந்து தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் துடித்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் படுகாயத்துடன் சேர்க்கப்பட்ட அவரது நண்பர் சேசு மாணிக்கத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிதாப சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் காங்கயம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×